நிறுவனர் : சிவஸ்ரீ ஏ. வி. சுவாமிநாத சிவாச்சாரியார்
“கோயில் பெருத்தது கும்பகோணம்” என்னும் முதுமொழிக் கேற்ப எண்ணற்ற கோயில்களையுடையதும்,சைவம் வைணவம் ஆகிய இருசமயப்புகழும்கொண்டதும், இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிட்டாலும் மக்கள்வழக்கில் உள்ள கும்பகோணம் என்றபெயரே ப்ரசித்தமானது. உலகப்புகழ் பெற்ற மகாமக உற்சவம்நடைபெறும் தலமும் இதுவே. இத்தனைசிறப்பு பெற்ற கும்பகோணத்தில் 1965 ஆம்ஆண்டு புள்ளிரிக்குவேளூர்(வைத்தீஸ்வரன்கோயில்) திரு.ஏ. எம்.வைத்யநாதகுருக்கள்-லக்ஷ்மிவைத்யநாதன் தம்பதிகளுக்கு தவப்புதல்வனாக சிவஸ்ரீ ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்பிறந்தார்.
புள் (சடாயு) இருக்கு (வேதம்) வேள் (முருகன்) ஊர் (சூரியன்)என்ற நால்வரும் வழிபட்டமையால் புள்ளிருக்குவேளூர் என்று பெயர் பெற்றது.சடாயு வழிபட்டதால் சடாயுபுரி என்றும், வேதம் பூஜித்ததால் வேதபுரிஎன்றும், கந்தன் பூஜித்ததால் கந்தபுரிஎன்றும், சூரியன் பூஜித்தவூர் பரிதிபுரிஎன்றும், அங்காரகன் வழிபட்ட தலம் அங்காரகபுரம்என்றும், அம்பிகை வழிபட்டதால் அம்பிகாபுரம்என்றும், இறைவன் இத்தலத்து மந்திரமும்மருந்தும் ஆகி உயிர்களின் வினைகளைப்போக்குவதால் வினைத்தீர்த்தான் கோயில் என்றும் பலபெயர்களையும், சிறப்புகளையும் கொண்டு போற்றப்படும் புள்ளிருக்குவேளூரைபூர்வீகமாக கொண்டவர் இவர். தனது ஆரம்பகல்வியை வேளூர் பள்ளியிலே படித்துவந்தார். 1977 ஆம் ஆண்டு தருமையாதீனம் வேதசிவாகம பாடசாலையில் சிவபுரம் சுவாமிநாத சிவாச்சார்யார் அவர்களிடம் வேத ஆகம சாஸ்த்திரபாடங்களை பயின்ற இவர் தருமையாதீனத்திற்கு சொந்தமான வேளூர் (வைத்தீஸ்வரன்கோயில்) தேவஸ்தானத்தில் நித்ய நைமித்ய காம்ய பூஜைகளை சிறப்பாக செய்து வந்தார். 1989 ஆம்ஆண்டு தாம் பயின்ற தருமையாதீனம் வேதசிவாகம பாடசாலையில் தலைமயாசிரியராக இருந்து தமது குருநாதரின்பணியை தொடர்ந்தார். பின்னர் 1996ல் மயிலாடுதுறை காவேரிகரையில் தனது குருநாதரின் சொந்தஊரை பெயராக கொண்டு சிவபுரம் வேத சிவாகம பாடசாலையை துவக்கினார்.
இவர் இந்தியா மற்றும் உலகெங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கும்பாபிஷேகங்களில் சர்வசாதகராக இருந்து நடத்தி வைத்திருக்கிறார்.இவரிடம் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள்வேதசிவாகம பயிற்சி பெற்று சிறந்தஅர்ச்சகர்களாக உருவாகி இந்தியா மற்றும்உலகெங்கிலும் சிவாச்சார்யார்களாக பணிபுரிந்து வருகின்றனர். “ஆன்மார்த்த சிவபூஜை விளக்கம்” எனும்நூல் மற்றும் பல கட்டுரைகள்எழுதியுள்ளார். வேதசிவாகம கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் தொடர்ந்து வேத சிவாகம திருமுறைகளின்ஒப்பாய்வுகள் நடத்தியும் வருகிறார். தருமையாதீனம், திருவாவடுதுறையாதீனம், திருப்பனந்தாள் காசி மடம் ஆகியதமிழகத்தின் முப்பெரும் சைவத் திருமடங்களில் அணுக்கமாகஇருந்து ஆதீனத்திருக்கோயில்களின் கும்பாபிஷேகங்கள் மற்றும் கருத்தரங்குகளைப் பொறுப்பேற்றுநடத்தி வருகிறார். தருமையாதீனம் 26வது குருமஹாசன்னிதானம் அவர்களிடம்சைவ சித்தாந்த ஞான உபதேசங்கள் கேட்டும்தெரிந்தும் அவ்வழி நின்று, உலகெங்கும்சைவ சமயம் பரப்புப்பணியை தலையாய்க்கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இவர் பெற்றுள்ள விருதுகளில் சில:
ஆகம ப்ரவீணர்
தருமையாதீனம் 1982
சிவாகம பூபதி ரத்னகிரி ஸதஸ்,வேளூர் 1990
சிவாகம சித்தாந்த சரபம் ஸ்ரீ பூமீஸ்வரர் தேவஸ்தானம்,குன்னம் 2002
சிவாகம சீலர் அனைத்திந்திய ஆதிசைவ மாநாடு, மயிலாடுதுறை 2004
சிவாகம செல்வர் ஸ்ரீ மாயூரநாதர் குடமூழுக்கு, திருவாவடுதுறையாதீனம் 2005
சிவாகம கலாநிதி தருமையாதீனம் 2006
சைவாகம வசன பூஷனம் பெர்த் இந்து கோயில் ஆஸ்திரேலியா 2008
இவர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செய்திருக்கும் முக்கிய கும்பாபிஷேகங்களில் சில: (இந்தியாவில்)
மாயூரநாதசுவாமி திருக்கோயில் மயிலாடுதுறை
மஹாலிங்கசுவாமி திருக்கோயில் திருவிடைமருதூர்
சரபேஸ்வரர் திருக்கோயில் திருபுவனம்
மஹாமாரியம்மன் திருக்கோயில் சமயபுரம்
தோனியப்பர்,ஞானசம்பந்தர் திருக்கோயில் சீர்காழி
ஆத்மநாதஸ்வாமி, மாணிக்கவாசகர் திருக்கோயில் திருப்பெருந்துறை
வெளிநாடுகளில்:
சிவன் திருகோயில் சிங்கப்பூர் கேலான்
முருகன் திருக்கோயில் மலேசியா ,பத்துமலை
ராமலிங்கஸ்வாமி திருக்கோயில் மலேசியா, பென்சர்
ஸ்ரீ மஹாமாரியம்மன் திருக்கோயில் ரீயூனியன்
ஸ்ரீ முருகன் திருக்கோயில் லண்டன்
இந்து திருக்கோயில் ஆஸ்த்திரேலியா, ப்பர்த்
ஸ்ரீ மஹாமாரியம்மன் திருக்கோயில் தாய்லாந் ,பேங்காக்
திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் ஸ்ரீ லங்கா
பங்கு கொண்டு சிறப்பித்த சில கும்பாபிஷேகங்கள்:
மீனாக்ஷியம்மன் திருக்கோயில் மதுரை
கற்பகவினாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டி
நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி.
அர்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்கோடு
இராமநாதஸ்வாமி திருக்கோயில் இராமேஸ்வரம்
தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு