உ
சிவமயம்
மஹாளயபக்ஷம், வேதபாராயணம், வேதார்த்தி ஸமாராதனை
நிகழும் சுபகிருது வருடம் ஆவணிமாதம் 26 ந்தேதி (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை துவங்கி, புரட்டாசிமாதம் 7 ந்தேதி (24.08.2022) சனிக்கிழமை முடிய மஹாளய பட்சமும், புரட்டாசிமாதம் 8 ந்தேதி (25.09.2022) ஞாயிற்றுக்கிழமை மஹாளய அமாவாசையும் இவ்வாண்டு நிகழ்கிறது. இந்நாட்களில் பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் பூலோகத்திற்கு வந்து தமது சந்ததிகளை ஆசீர்வதிப்பார்கள். அது சமயம் நாமும் தர்ப்பணம் சிராத்தம் அன்னதானம் முதலியன செய்து அவர்களை திருப்தி செய்யவேண்டும் என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் திருப்தியடைந்தால்தான் இயற்கைவளம்பெறும். மனித வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
எல்லோரும் இப்புண்ணிய செயலைச்செய்து மேன்மை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில், நித்யசதுர்வேத பாராயணம், கோபூஜை சமாராதனை அன்னதானம் முதலியன மஹாளயபட்ச நாட்களில் தினமும் நிகழவுள்ளன. இப்புனித கைங்கர்யத்தில் எல்லோரும் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.
காவிரிஸ்நானம், தர்ப்பணம் , செய்து மடிசாப்பாடு வேண்டியவர்களுக்கு தக்க உதவிகள் செய்து தரப்படும்.
தொடர்புக்கு;
செந்தில்குருக்கள்: +91 8072620903,
மண்பயனுற வேண்டும்
சிவபுரம் கல்வி அறக்கட்டளை
மயிலாடுதுறை.

